Friday, August 26, 2005

SHOT of the Day அல்லது நெத்தியடி !

**************************************
எனக்குத் தெரிந்த ஆசனம் --- சுஜாதா

சில தியான மையங்களில் 'குண்டலினி சக்தி' என்று கூறி நமது அடிவயிற்றிலிருந்து முதுகுத் தண்டு வழியாக மேலே பயணித்து நெற்றிக்கு வந்து ஒரு 'சூப்பர் பவராக' மாறும் என்கிறார்களே, அது எப்படி ? அது உண்மையா ?

--- ஆர்.பி.ராஜ்குமார், பரமக்குடி

சுஜாதா பதில் : இதைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. எதையாவது எழுதப் போய் உலகெங்கும் யோகா கிளாஸ் நடத்தி (ஜல்லியடித்துக்) கொண்டிருப்பவர்கள் "உனக்கு இதைப்பற்றி தெரியவில்லை என்றால் வாயையும் குண்டலினியையும் பொத்திக் கொண்டு சும்மா இருப்பது தானே" என்பார்கள். எனக்குத் தெரிந்த ஒரே ஆசனம் சவாசனம்.

நன்றி: குமுதம்

9 மறுமொழிகள்:

ஏஜண்ட் NJ said...

எச்சரிக்கையொடு பதிலளிக்கிறார் போலும் சுஜாதா!

எல்லாம் நம்ம வலைப்பதிவர்கள், அவருக்கு பூச்சி பூச்சியாக hyperlink எல்லாம் வெச்சு e-mail -அனுப்பி,

எக்ஸிஸ்டென்ஷியலிசம் குறித்து .... மொத்ததில் சுஜாதா எழுதியுள்ளது உளறல். தமிழில் அதிகம் விற்பனையாகும் வார இதழில் இப்படி ஒரு குறிப்பு வெளியாகியிருப்பது வெட்கக்கேடு.

நானோ டெக்னாலஜி’ பற்றி... ...சுஜாதாவின் பதில் ஒரு ஜல்லியடிக்கும் பதிலாக இருக்கிறது.

இப்டில்லாம் சொன்னது எப்டி வேல செய்யிது பாருங்க!!!

குழலி / Kuzhali said...

ஹா ஹா...
வலைப்பதிவு உலகம் சத்தமில்லாமல் ஒரு புரட்சி செய்து கொண்டு வருகின்றது என்பது சுஜாதாவின் இந்த பதிலில் இருந்து தெரிகின்றது,

சும்மா காமா சோமா என்று அறிவு ஜீவித்தனமாக எதுவும் இனி எழுத முடியாது என்பது அவர்களுக்கு புரிகின்றது போலும், வாழ்க நம் வலைப்பதிவின் புரட்சி.

வீ. எம் said...

ஹஹஹஹஹா
//ஜல்லியடித்துக்//

பாலா வார்த்தைக்கு நடுவுல உன்மையாவே சுஜாதா தான் சொன்னாரா? இல்ல நீங்க சைக்கிள் கேப்ல லாரி ஓட்டி .......
நீங்க அடிச்ச ஜல்லிதானே அது?? :)

வீ எம்

said...

வலைப்பதிவுளையும் அறிவுசீவித்தனம் (அப்படின்னு அவிங்க நினச்சுகிட்டு கண்டத) காட்டி ஜல்லி, மண்ணு, தண்ணியெல்லாம் அடிக்கறவங்க மட்டும் உருப்படியாவா எழுதுறாங்க. அவிங்களுக்கும் ஆப்பு வரும்லா. அப்ப தெரியும் எங்க ஆப்பு வெச்சா எங்க எரியுன்னு! :))

.:டைனோ:.

Boston Bala said...

Subtle நக்கல் :-) Besides, "a good general always picks his battlefield on which to fight."

குமரேஸ் said...

பாலா,

நல்ல நக்கல்

என்னங்க எல்லாருமே இப்படி போட்டுத்தாக்கினால், சங்கர், கமல் என்று சிலருக்காக திரைப்படங்களுக்கு வசனம் எழுதிக்கொண்டிருப்பவர், அப்புறம் எல்லாருக்குமே வசனம் எழுதுவதற்கு போய்விடுவார் ஜாக்கிரதை

enRenRum-anbudan.BALA said...

வீ.எம், குழலி, டைனோ, பாஸ்டன் சார், ஞானபீடம், kumaress

கருத்துக்கு நன்றி !!!

VM,

//பாலா வார்த்தைக்கு நடுவுல உன்மையாவே சுஜாதா தான் சொன்னாரா? இல்ல நீங்க சைக்கிள் கேப்ல லாரி ஓட்டி .......
நீங்க அடிச்ச ஜல்லிதானே அது?? :)
//
This is a BIT TOO MUCH :)

Boston Bala,

//Besides, "a good general always picks his battlefield on which to fight."
//
:-)))))))))))))

enRenRum-anbudan.BALA said...

//சும்மா காமா சோமா என்று அறிவு ஜீவித்தனமாக எதுவும் இனி எழுத முடியாது என்பது அவர்களுக்கு புரிகின்றது போலும்,
//
காமா சோமா என்று கூறுவதெல்லாம் சற்று அதிகமாக படுகிறது. பல விஷயங்களும் படித்து அறிந்தவரை, நல்ல ஒரு எழுத்தாளரை, அவர் "Blogs are EGO trips" என்று கூறியிருந்தாலும் கூட (அப்படி சொல்லியிருக்கக் கூடாது தான்!), இப்படி எளிமையாக புறம் தள்ளுவது சரியானதாக தோன்றவில்லை.

said...

Blogs are EGO trips"
ஏன். அவர் சொன்னதில் என்ன தப்பு இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை. அவர் Blogs மட்டும் Ego Trips என்று சொல்லவில்லை. தேர்ந்து எடுத்து படியுங்கள் என்றுதான் சொல்லி இருக்கிறார்.
ஆனால் எல்லோரும் அவர் சொன்ன ஒரு வாக்கியத்தை மட்டும் எடுத்துக்கொண்டு "ஜல்லியடித்து" கொண்டு இருக்கிறார்கள்.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails